search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளி"

    • செல்போனை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
    • 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    கோவை:

    ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பரவ்சூரி (வயது 24). இவர் அன்னூர் அருகே உள்ள பொன்னாத்து பாளையத்தில் தங்கி இருந்து கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ெதாழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் தனது நண்பரான திக்காரம் (23) என்பவரை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி விட்டு அறைக்கு சென்று கொண்டு இருந்தார். அவர் தென்னம பாளையம் - அன்னூர் ரோட்டில் நடந்து சென்ற போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் பரவ்சூரியை வழிமறித்து தாங்கள் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து அவரது வயிற்றில் குத்தினர். பின்னர் பரவ்சூரியிடம இருந்த ரூ.1,300 ரொக்க பணம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து தப்பிச் சென்றனர்.

    கத்திக்குத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்தியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வட மாநில ெதாழிலாளியை கத்தியால் குத்தி பணம் மற்றும் செல்போனை பறித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

    • மயங்கி விழுந்து பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த தொழிலாளியை பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர்.
    • பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    பெருந்துறை:

    மேற்குவங்க மாநிலம் 24 பர்கானாஸ் சித்தா கிராமம் பகுதியை சேர்ந்தவர் காளிசரண்பஹார். இவர் பெருந்துறை, பணி–க்கும்பாளையம் பகுதியில் மனைவி, மகள் மற்றும் மகன்களுடன் வசித்து வருகிறார்.

    கடந்த 3 மாதங்களாக மகன்கள் சேகர்பகர், சசாங்காபகர் ஆகியோருடன் பெருந்துறை பகுதியில் கட்டிட கூலி வேலை செய்து வந்தார்.

    இதில் மகன் சேகர்பகர்க்கு அடிக்கடி நெஞ்சுவலி வந்து உள்ளது. அதற்காக அவர் சிகிச்சை பெற்று மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வழக்கம்போல பெருந்துறை குன்னத்தூர் ரோடு பகுதியில் உள்ள ஒரு காம்ப்ளக்ஸில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென சேகர்பகர் மயங்கி விழுந்துள்ளார். பேச்சு மூச்சு இல்லாமல் இருந்த அவரை உடனடியாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டார் என தெரிவித்தனர்.

    இது தொடர்பாக தகவல் அறிந்த பெருந்துறை இன்ஸ்பெக்டர் மசூதாபேகம் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • வேடசந்தூரில் மில் தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்
    • தூக்கில் தொங்கிய நிலையில் வடமாநில தொழிலாளி

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள தனியார் மில்லில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த செவனாதாஸ்(20) என்பவர் வேலைபார்த்து வந்தார். இவர் இன்று காலை திண்டுக்கல்-கரூர் சாலையில் உள்ள ஒரு மரத்தில் தூக்குமாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார். அவர் அணிந்திருந்த சட்டையில் தூக்குமாட்டியநிலையில் இருந்ததால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சந்தேகமடைந்தனர்.

    உடலில் காயங்களும் இருந்ததால் இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. டி.எஸ்.பி தலைமையில் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எப்படி இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×